பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் 米 8G 米 'நிலாவும் வான்மீனும், காற்றும்', 'காலைப் பொழுது', அந்திப் பொழுது', 'ஒளியும் இருளும்' என்ற பாடல் களை அவன் செவிமடுத்திருக்க வேண்டும். 1. நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோலவெறி படைத்தோம்; உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஒட்டி மகிழ்ந்திடுவோம்; பலாவின் கனிச்சுளை வண்டியில் ஒர்வண்டு பாடுவதும் வியப்போ? (1) தாரகை யென்ற மணித்திரள் யாவையும் சார்ந்திடப் போமனமே, ஈரச் சுவையதி லூறி. வருமதில் இன்புறு வாய்மனமே! சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே ஒரழ காக விழுங்கிவிடும் உள்ளத்தை ஒப்பதோர் செல்வமுண்டோ? (2)" 2. தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச் செய்துவருங் காற்றே! உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோர் உள்ளம் படைத்து விட்டோம் 13. இவை நான்கும் தனிப்பாடல்கள் பகுதியில் உள்ளவை. 14. பா.க: தனிப்பாடல்கள் - நீலாவும்.... 1.2