பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 90 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு 3. மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்; பண்ணி லிசைத்தவ் வொலிக ளனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்.' 4. மாதர் முகத்தைநினக்கினை கூறுவர் வெண்ணிலாவே - அஃது வயதிற்கவலையின் நோவிற் கெடுவது வெண்ணிலாவே காதலர் நெஞ்சை வெதுப்புவை நீஎன்பர் வெண்ணிலாவே! - நினைக் காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை வெண்ணிலாவே (4)” இந்தப் பாடல்களைப் பண்ணொடு பாடக் கேட்ட பட்டிக் காட்டான், விண்ணிலொரு மீன்கள் மின்னுமே,அடா! - விண்ணில் விளங்கும் மதிநிலவு வீசுமே, அடா! கண்ணுக் கினியசோலை காணுமே,அடா! - அதில் களித்திள மான்கள்விளை யாடுமே,அடா! (6) என்ற பாடலை அமைத்து மகிழ்கின்றான். அவன் கீழ்க்கண்ட பாடல்களையும் பண்ணோடு பாடச் செவிமடுத்திருக்க வேண்டும். 1. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணி யிருப்பார் பித்தமனிதர் அவர்சொலும் சாத்திரம் பேயுரை யாம்என்றிங்கு ஊதேடா சங்கம்: (1) 15. மேற்படி - மேற்படி - 4.5 16. தோ.பா. வெண்ணிலாவே - 24.