பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

→ 92 * கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர் பட்டினி தீர்ப்பன் செட்டி தொண்டரென் றோர்வகுப் பில்லை - தொழில் சோம்பலைப் போல்இழி வில்லை (3) நாலு வகுப்பும்இங் கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி (4) தெய்வம் பலபல சொல்லிப் - பகைத் தீயை வளர்ப்பவர் மூடர், உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும் ஒர்பொரு ளானது தெய்வம் (11) தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம் திக்கை வணங்கும் துருக்கள் கோயிற் சிலுவையின் முன்னே - நின்று கும்பிடும் யேசு மாதத்தார், (12) யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; . இதில் பற்பல சண்டைகள் வேண்டா (13) 20 5. வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானிழல் வளரும் மரமெலாம் நான்; காற்றும் புனலும் கடலுமே நான் (1) விண்ணில் தெரிகின்ற மீன்எல்லாம் நான்; வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான் வாரியி லுள்ள உயிரெலாம் நான் (2) 20. பா.க. பலவகைப் பாடல்கள் - முரசு - 2,3,4,11,12,13