பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 168 + கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு கங்கைவார் சடைகரந்தார்க் கன்பராகில், அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுலாரே (10) என்ற தேவார அடிகளை நினைக்கச் செய்கின்றது. வைணவ சமய இலக்கியங்களில் கண்ட எடுத்துக்காட் டுகளும் தருகின்றார் கவிமணி. பார்ப்பார்கள் தோள்சுமந்து பாணரைமுன் திருக்கோயில் சேர்த்தார்கள் என்றகதை தெரியாதோர் உண்டோ? ஐயா! (9) இதில் திருக்குலத்துத் திருப்பாணாழ்வாரை லோக சாரங்க முனிவர் என்ற பார்ப்பன அர்ச்சகர் உறையூரை அடுத்த காவிரியின் தென்கரையிலிருந்து அரங்கநாதர் சந்நிதிக்குச் சுமந்து சென்ற வரலாறு குறிப்பிடப் பெறுகின்றது. சண்டாளர் ஆனாலும் சக்கரத்தான் அடியவரேல் கொண்டாடத் தக்கோள்எனக் கூறுவதும் பொய்மொழியோ? (28) இத்திருப் பாடல் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்க ளின், பாதியாய் அழுகியகால் கைய ரேனும் பழிதொழிலும் இழிகுலமும் படைத்தா ரேனும் ஆதியாய் அரவணையாய் என்பர் ஆகில் அவரன்றோ யாம்வணங்கும் அடிகள் ஆவார்." என்ற பாசுரத்தையொட்டி அமைந்திருப்பதாகத் தெரிகின் திது. 16. திருவரங்கக் கலம்பகம் - 15