பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் - 53 - சாதியினால் குறைவில்லை; தாழ்ந்தவரும் பக்தியினால் வேதியரிற் பெரியார்ளன விளம்பும்மொழி வீண்மொழியோ? (27) இந்தத் திருப்பாடல் தொண்டரடிப் பொடி யாழ்வாரின், 'பழுதிலா ஒழுகலாற்றுப் பலசதுப் பேதிமார்கள்: 'இழிகுலத் தவர்களேனும் எம்மடி யார்களாகில் தொழுமினி கொடுமின் கொள்மின்' என்றுநின் னொடுமொக்க வழிபட அருளினாய்போல்' மதில்திரு வரங்கத்தானே' என்ற திருப்பாசுரத்தின் கருத்தையொட்டி அமைந்துள்ளது. அடுத்து காளிதேவியைப் பற்றிப் பேசுகின்றார்: "கள், ஆடு, கோழி இவற்றைக் கலந்து உண்ணும் காளி தேவியின் கோயிலில் எங்கட்கு உரிமை இல்லையா? பள்ளர்களாகிய எம்மைக் கண்டவுடன் பயந்தோடிப் போவாரோ?' என்று தீண்டாதார் வாயில் வைத்துப் பேசுகின்றார். அடுத்துப் பொதுவாக அவர்கள் வாயில் வைத்துப் பேசும் பாடல்கள் உள்ளத்தை உருக்குபவை; உணர்ச்சிப் பிழம்பானவை. அவற்றுள் சில: காப்பாற்றி நமையாளும் கடவுளரும் மக்களுக்குள்ளே பார்ப்பார்கள் பறையரென்ற பகுப்பேதும் வைத்ததுண்டோ? (12) 17. திருமாலை - 42