பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 17G + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கோவிலிலே தீட்டேறிக் குடிபுகுமோ? குளிப்பவரின் பாவமெல்லாம் கங்கையிலே படிந்திடுமோ? கூறும்.ஐயா! (13) பாவிகளை ஈடேற்றிப் பதமளிக்கும் பரமசிவ கோயிலிலே எமைக்கண்டால் குடிமுழுகிப் போய்விடுமோ! (16) அண்டம்எல்லாம் காக்கும்ஈசன் ஆலயத்தில் மக்கள்எம்மைக் கண்டகண்ணைக் கழுவுவரோ? கருணைசெய்ய மாட்டாரோ? (18) தருமஉரு வாம்ஈசன் தமியரையும் கண்டவுடன் கருணைவிழி அடைப்பாரோ? கனல்விழியைத் திறப்பாரோ? (19) குற்றமிலா எமைக்கண்டு. கோயிலையும் அடைக்கலாமோ? பெற்றவரைக் காணவரும் பிள்ளைகளைத் தடுப்பார்உண்டோ? (20) தாகம்என்று வருபவர்க்குத் தண்ணீரை அழியாமல் ஆகமங்கள் ஓதிநிற்றல் அழகாமோ? அறமாமோ? (25) சாவியிட்டுப் பூட்டுமிட்டுச் சந்நிதியில் காவலிட்டுத் தேவிருக்கும் கோயிலைநீர் சிறைச்சாலை ஆக்கலாமோ? (29)