பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 171 -}. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பினைநீர் பொல்லாதார் பொருளெனவே பூட்டிவைப் தழகாமோ! (30) நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலத்தினைநீர் கல்லாலே கோட்டைகட்டிக் கடுங்காவல் செய்யலாமோ? (31) காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணுதலை வீணாக மூடிவைத்து விளங்காமற் செய்யலாமோ? (32) எல்லார்க்கும் வரமளிக்கும் எம்பெருமான் ஆலயங்கள் வல்லார்க்குச் சொந்தம்என வழக்காடல் முறையோ?ஐயா! (33) இங்ங்னமெல்லாம் காரணங்கள் காட்டிக் கருணை உணர்வை கிளர்ந்தெழச் செய்கின்றனர். பின்னர் அவர் தம் அறியாமையை, படிப்பின்மையை, ஏழ்மையை எடுத்துக் கூறி இரக்க உணர்வைத் தட்டி எழுப்புகின்றனர். இறுதி ti ift:55, நாடாளக் குடியரசு நாடுவார் ஆலயத்தில் நீடாகத் தனியரசு நிலைநாட்டத் துணியலாமோ? (38) என்று குடியரசு உண்மையைச் சுட்டுகின்றனர்.