பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 72 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு முற்போக்குச் சாதியார் அனைவரும் திருக்கோயிலுக் குச் சென்று வழிபடுவதில்லை. அதுபோல தீண்டாதாரும் சென்று வழிபடலாம் என்ற நிலை ஏற்பட்டால், அவர்கள் அனைவரும் அனுதினமும் வழிபாட்டுக்குத் திருக்கோயில் செல்வர் என எதிர்பார்க்க வேண்டா. வேண்டும்போது போகலாம் என்ற உரிமை முன்னவருக்கு இருக்கும்போது பின்னவருக்கும் அது வேண்டும் என்பதே ஈண்டுக் குறிப்பி டுவது. தொழிலாளர் நிலை: தொழிலாளர்களின் பிரச்சினை களைப் பாவேந்தர் தீர்க்க முயலும் நிலை வேறு; கவிமணி தீர்க்கும் நிலை வேறு. பாவேந்தர் பிரச்சினைகளைப் புரட்சி மூலம்தான் தீர்க்க முடியும் என்பார். கவிமணி பிரச்சினைகளை அலசி ஆய்கின்றார். வழியொன்றும் காட் டவில்லை. பாரதியார் தொழிலாளர்கள் ஒன்று பட வேண் டும் என்பார். - ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்ற தாரக மந்திரமே வெற்றிக்கு வழி என்று கூறுவார். பாவேந்தரோ, புதுக்கணக்குப் போட்டுவிடு, பொருளை எல்லாம் பொதுவாக எல்லார்க்கும் நீகுத்தகை செய்" என்று கூறிப் பொதுவுடைமைப் பாதையைக் காட்டுவார். கவிமணியோ, 18. பா.க. தே.கீ. - வந்தே மாதரம் - 4 19. உலகப்பன் பாட்டு