பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்


அமைதி


ஆசை யெனும்பணப் பாசத் திரையை
யகற்ற இக்கண மேயெழு! - அவமாய்ப்
பேசும் பேச்சில்நம் நேசம் போச்செனில்
பெரிது மதுநமக் கேவழு!

தினமும் நெஞ்சினைத் தேச நலமெனும்
தெளிந்த நீரினிற் கழுவியே - தீரத்
தனது தானெனும் மாசு மறுவுகள்
தங்கி டாதுநன் கொழுகியே,

தூய நினைவெனும் கோயில் தனிலறி
வுச்சு டர்விளக் கேற்றியும் - தோன்றி
ஆயு மிரவிலும் பகலி லும்மத
ணைந்தி பாதுகாப் பாற்றியும்,

பெருசு சிறுசெனும் சாதி மதஇன
பேத மின்றி யிணங்கியே - பேணும்
அரசு மாண்டியும் சரிச மானமா
யங்கி ருந்து வணங்கியே,

பெருகும் நதியினில் தவறி வீழ்ந்துயிர்
பெற்றெ ழுந்தவர் போலவே - ’பேறெ’ன்
றுருகி நிற்குமந் நிலையில் காண்பரங்
குள்ள யாவரும் சாலவே!

157