பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () () இவ்வுரைத்த குறையன்றிக் கான கில்லேன் ; இனி.எனை நீ காத்தளித்த பண்பு சொல்வேன்; அவ்வைக்கு நெடுங்காலம் உயிர்நி லைக்க அதியனெனும் ஒருவள்ளல் இருந்தான் முன்னாள் ; உய்வித்துச் சிறியேனை நீண்ட காலம் உயிர்வாழ அருளினை நீ; எனக்கும் அந்த அவ்வைக்கும் வள்ளல்களை ஈந்து காத்த அத்தமிழைச் செந்தமிழை வணங்கு கின்றேன் (11) குருதியுமிழ் கொடுநோய்க்கே ஆளாய் நின்றேன் குறுநகையும் பெருநகையும் இழந்து நின்றேன் செறுபகையும் எனைக்கானின் இசங்கி நிற்கும் செயலற்றேன் நடைதளர்ந்தேன் உடல்மெ லிந்தேன் மறுபடியும் உயிர்வாழ்வேன் என்ற எண்ணம் மாய்ந்து விட மாயாத கவலை கொண்டேன் ; உறுதியுனைக் காக்கின்றேன்’ என்று வந்தென் உயிர்காத்தாய் ! உன்னருளால் வாழ்கின் றேன்.நான் (12) உயிர்காத்த உத்தமனே! என்பாற் கண்ட உயர்வென்ன? தமிழன்றி வேறொன் றில்லை; செயிரில்லாச் செந்தமிழைப் பாடும் வாயில் செங்குருதி சிந்துவதா என நி னைந்தோ? உயிர்பிழைத்தால் இவனும்போய்த் தமிழைக் காப்பான் உயர்கவிதை பலதருவான் எனுங்க ருத்தோ? அயர்வின்றி அருகிருந்து காத்த தாயே! ஆலய மாம் என்னுளத்தில் அமருந் தேவே! (13)