பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் தந்தை நல்லன்பைக் கண்டேன் அல்லேன் தகுபொழுதில் உதவுவதற் குறவு மில்லேன் நோய் வந்து மனத்துயரால் மாழ்குங் காலை நுவலரிய தனித்துணையாய் இராமச் சந்த்ரக் சேய்கொண்டு மனநோவைத் தீர்த்து வைத்துச் சிறியேனை தின் குடும்பத் தொருவன் ஆக்கிச் சேய் போல ஆட்கொண் டாய்! அன்பு செய்தாய்! செம்மனத்தோய்! கைம்மாறு யாது செய்வேன்? எந்நாளும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி ஏத்துவதே தொழிலானேன் என்றன் சேய்க்குப் பொன்னான நின்பெயரைச் சூட்டி நெஞ்சில் பூசித்து மகிழ்கின்றேன் போற்று கின்றேன் நின் பேரன் என்மகனாம் கார ணத்தால் நீஎனக்குத் தந்தைமுறை ஆகி விட்டாய் என்ன பிழை நான் செயினும் பொறுத்தல் வேண்டும் என்தந்தாய்! பொன் தந்தாய்! புகழும் தந்தாய்! என்னுயிரைக் காத்தமையால் தன்க முத்தில் எழிற்றாலி மின்னுவதைக் கண்டு நெஞ்சால் என் மனையாள் வாழ்த்துகின்றாள்; என்றன் சேய்கள் எம்தந்தை தந்தாயென் றேத்து கின்றார்; நன்மழலைச் செல்வர்களைக், காதல் வாழ்வின் நற்றுனையை நான் மீண்டுங் கானச் செய்த உன்னுதவி நாடோறும் ஏத்து கின்றேன்; உயிரனையாய்! திருவடியை வாழ்த்துகின்றேன் . -ఖిస్తే: షో స్రీ : శెక్మెన్లే -*--------- 1 () | (14) (15) (16) இராமச்சந்திரச் சேய் - புதுக்கோட்டை மருத்துவப் பேரறிஞர் டாக்டர் வி. கே. இராமச்சந்திரனார், இ வ. ரு ம் அண்ணலால் உகுவாக்கப் பட்டவராதலின் சேய் எனப்பட்டார்.