பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3 || சொல்லும் செயலும் அனைத்துலக நிலைபேசி, அமைதி ஓங்க ஆர்ப்பரித்து, நrடுபிடிக் கின்ற எண்ணம் தினைத்துணையும் எமக்கில்லை என்ற கொள்கை தீவிரமாப் பேசுகிற அண்டை நாட்டார், முனைத்தெழுந்து பிறரெல்லைக் கோட்டைத் தாண்டி மீண்டுமவர் உலகப்போர் மூளு தற்கு நினைக்கின்றார்; பிறருரிமை பறிப்ப தற்கு நினைப்பவரைத் தடுப்பதுநம் உரிமை யாகும் (12) எழுத்துரிமை எழுத்தாளர் மன்றத்திற் பாடு கின்றேன் எழுத்துரிமை ஓரளவு உரைத்தல் வேண்டும்; எழுத்தாளர்க் கிந்நாட்டிற் பஞ்ச மில்லை ஏனென்றால் அஃதொன்றே எளிமை யாகும்; முழுத்தாளில் எழுத மட்டுந் தெரிந்தாற் போதும் மொழியறிவு, கலையுணர்வு, கல்வி ஆற்றல், தழைத்தோங்கும் சிந்தனைகள் ஒன்றும் வேண்டா; தமிழெழுத்துச் சிலமட்டுந் தெரிந்தாற்போதும் (13) இருக்கின்ற தமிழ்நூலைப் படிப்ப துண்டா? எவரெவரோ சிந்தித்து வரைந்த நூலில் பொறுக்குகின்ற பேரெல்லாம் இந்த நாட்டிற் புகழ்மிக்க எழுத்தாளர்! அவரை எல்லாம் உருத்ததட்டித் தடுப்பதற்கோர் வகையும் இல்லை; ஒரிருவர் தடுத்தாலும் உரிமை என்பார்; கிறுக்கரிடம் அகப்பட்ட தமிழ ணங்கே ! கேடின்றி நினக்குரிமை கிடைப்ப தென்றோ? (14)