பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கண் டிடின் இவரை என்றும் காழ்ப்பகை தோன்றா தென்று விண்டனன்; பின்னர் நாங்கள் விண்ணினில் பறந்து சென்றோம் (15) எண்சீர் விருத்தம் வாலி மலைமுகட்டில் முகில்தவழும் உயர்கிட் கிந்தை மாநகரில் இறங்கியதும் மனமு டைந்தேன்; கொலைமுகத்த கூரம்பு நெஞ்சந் தன்னில் குருதியினைப் பாயவிட எண்ண மெல்லாம் நிலைமுகத்தால் பேசுகின்றான் வாயுஞ் சோர்ந்தான் நெடுமலைபோல் புரள்கின்றான் வஞ்ச நெஞ்ச வலைமுகத்துள் சிக்குண்டான் போலும் என்று வருந்தி அவன் யாரென்றேன் வாலி யென்றான் (16) ஏனிந்த நிலையென்றேன்; உடன்பி றந்தார் இருவர்க்குள் நேர்ந்தபகை' எனப்பு கன்றான்; வானிகந்த வலியானை எய்தோன் யாவன்? என வினவ ஆண்டுளன்பார்’ என்று சுட்டக் கானிருந்த மரத்தடியில் வில்லைத் தாங்கி மறைந்திருந்த கரியவனைக் கண்ணாற் கண்டேன்; நானிலத்தில் வீரனென்போன் மறைந்தம் பெய்தல் நல்லதுவோ? வீரத்திற் கிழுக்காம் என்றேன் (17) முறுவலித்தான் அப்புலவன்; விடையே யில்லை; முணுமுணுத்தான் உடன் பிறப்புள் பிளவி ருந்தால் வருபவர்க்கு நல்விருந்தாம் நமது நாடு; வம்பெதற்கு? வாவா வென் றெனைய ழைத்தான்; காழ்ப்பகை - முற்றிய பகை விண்டனன் - (கம்பன்) சொன்னான்