பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவதனாற் சுட்டவடு ஆறா தென்றே நாகாத்தார் திறமுடனே யாவுங் காத்தார்; காவலரும் ஏவல்செயக் காத்தி ருக்கக் கற்றறிவு பெற்றிருந்தும் பணிவே கொண்டார்; பாவலர்தம் எல்லார்க்கும் பணிதல் நன்றாம்' என்றவுரை பகுத்துணர்ந்து பெரியர் ஆனார்: மேவியதோர் தந்நிலையிற் றிரியா தாங்கண் மிகவடங்கி மலையினுமே பெரிதாய் நின்றார்: (6) ஒப்புரவு கண்ணோட்டம் அன்பு வாய்மை உயர் நாணம் இவ்வைந்தால் சால்பு தாங்கிச் செப்பரிய மிகுதியினால் மிக்க செய்யின் செயற்கரிய தகுதியினால் அவரை வென்றார்: இப்புவியில் ஆணுக்குங் கற்பு வேண்டும் என்றதிரு வள்ளுவனார் நெறியில் நின்றார்; தப்பரிய குறள்நெறியிற் சிறிதும் மாறார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நற்பேர் வாழ்க! (7) எது அறம் ? இல்லறமா துறவறமா இவ்வி ரண்டுள் jo எதுவேண்டும் என வினவிதி ன், அறமென் றோத இல்லறமே சாலுமெனக் குறள் நூல் சொல்லும்; இந்நூலில் காமத்தை வேண்டா என்று சொல்லியவர் முன் னின்றே இல்ல றந்தான் தூயதெனச் சான்றுரைத்து நிறுவிக் காட்டி வெல்லுதலைத் தாம்கொண்டு குறள் நூல் வாக்கின் மெய்ப்பொருளை நன்குனர்ந்து விளக்கி நின்றார் (8) 堑T昏上 o == o ■ - = * = ي" ஆ * - ■ = - லரும் - நாடு காககும் ஆடசயாள ஈ ஒப்புரவு - பிறருக்கு உதவுதல் சால்பு - சான்றாண்மை மிகுதியினால் - செருக்கால் காமத்துப் பாலை வேண்டாவென்று கூறியவர் முன்னாள் கல்வியமைச்சர்