பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() () பெண் ரிைன் பெருமை சிறுவரையும் ஒருபொருளா எண்ணச் செய்யும் செல்வத்தைப் பெண்ணாக்கி, மடமை தீய்க்கும் பெருவலிய கல்வியையும் ஒர்பெண் ணாக்கி, பெறுவெற்றி, நல்லழகு, நிலம்பெண் னாக்கி, வருபசியை நீக்குகின்ற கூலம் மற்றும் வறுமையையும் பெண்ணாக்கி, வாழ்வில் என்றும் உறுதுணையாய் நல்விளக்காய் விளங்கு கின்ற ஓரினத்தைப் புண்ணாக்கி மகிழ்வு கொண்டோம் (9) இருகண்ணில் ஒருகண்ணைப் புண்ப டுத்தி இயற்கைஎழில் மறுகண்ணால் காண முந்தும் பெருமதியீர்! பெண்மைக்குப் பெருமை நல்கப் பிந்தாதீர்! நடந்துசெலக் காலி ரண்டும் சரிசமமா இல்லை எனில் நொண்டி என்று சாற்றுவரால்; சமன் செய்து வாழ்க என்றார் பெருமைமிகு திரு. வி. க. நல்ல பெண்ணிற் பெருந்தக்க யாவுளவோ எனுஞ்சொல் ஒர்ந்தார் (10) இனியவை கூறல் படிறிலதாய்ச், செம்பொருளைக் கண்டார் வாய்தான் பகருவதாய், அன்புகலந் திருப்ப தொன்றே படி யதனில் இன்சொல்லென் றுரைக்கும் பாட்டைப் பயிலுங்கால் பொருள் தேறேன்; தமிழ வானின் விடிவெள்ளி திரு.வி.க. மொழியைக் கேட்டேன் விளங்காத அக்குறளின் பொருளுணர்ந்தேன் கடிதலிலா இன்சொல்லின் இலக்க ணத்தைக் கண்டுகொண்டேன் இனியவையே அவர்வாய்ச் சொற்கள் (11) ச. லம் - தானியம் ஒர்ந்தார் - ஆய்ந்து உணர்ந்தார் படி று - வஞ்சனை படி - உலகம் தேறேன் - தெளிவாக உணர்ந்திலேன்