பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, 1 துனியுடைய ஒருசிலர்தாம் கூடி நின்று துாய்மைக்குத் தொடர்பிலராய் விலகிச் சென்று நனியிகந்த சுடுமொழிகள் கழறித் தம்முள் நகுமொழிகள் பலசொல்லி நகைத்தா ரேனும் முனிவறியார், பணிவுடையார் . இன்னாச் சொல்லை மொழிந்தறியார், அறிவுரையே உரைத்து நிற்பார் இனிய உள வாகவுமின் னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்தல் என்றார் அன்றோ? (12) சொல் வல்லார் பேருராம் சென்னை நகர் ஆலை ஒன்றில் பெருந்துயரம் பட்டதொழி லாளர் எல்லாம் ஈரேழின் ஆயிரவர் ஒன்று கூடி இனிப்பொறுமை இலை என்று கொதித்தெ ழுந்தார்; ஒராளும் இல்லாமல் சுடுகா டாகும் ஒருவிரலைத் தலைவரவர் காட்டி நின்றால்; ஆரூரர் திரு.வி.க. தலைவர் அந்நாள் அவ்விரலை அசைத்தனரா இல்லை! இல்லை! (13) பசிவயிறும் குழிகண்ணும் உடையா ரேனும் பார்வையிலே சுட்டெரிக்கும் தோற்றங் கொண்டோர், விசைஒடிந்த உடலெனினும் ஒவ்வோர் என்பும் வில்லாகும் அம்பாகும் வீரங் கொண்டோர், நசையோடு தலைவர்.தரும் ஆணை கொண்டு நாவசையாப் பொம்மைகளாய் நிற்றல் கண்டேன்; பிசகாமல் இனிதுசொல வல்லார்ப் பெற்றால் பெருஞாலம் விரைந்துதொழில் கேட்கு மன்றோ? (14) ____ துனி - பகைமை முனிவு - வெறுப்பு ஈரேழின் ஆயிரவர் - பதினாலாயிரவர் நசை - அன்பு