பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(F) (; தனங்குற்றம் ஒர்தல் பலவாகக் கிளைத்தெழுந்த கட்சிக் கூட்டம் , பாரிலுள அகச்சமையம், அவற்றி னோடு குலவாத புறச்சமையம் , மற்றும் இங்குக் கூட்டுகிற கூட்டமெலாம் பறந்து செல்வார்; விலகாமல் அனைத்திடத்தும் புகுதல் கண்டு வியர்த்திருப்பர் பக்தி எனும் கவசம் பூண்டோர்; நலமாகும் குணம் நாடிக் குற்றம் நாடி, நடுவாக மிகைநாடி மிக்க கொண்டார் (18) தவஞ்செய்தார் பிறனாக்கம் காணினிவர் பொறாமை கொள்ளார்; பேணி அவர் பெருமைஎலாம் புகழ்ந்து பேசி அறனாக்கம் மிகப்பெற்றார்; மறந்து நின்றும் அணுவளவும் பிறன் கேடு சூழார்; மேலும் உரன் ஆக்கும் தவஞ்செய்தார்; காடு செல்லார்; உடுப்பதுவுங் காவிகொளார்; துறவும் பூனார்: தரங்கெடுக்கும் ஆசையினால் அவஞ்செய் யாராய்த் - தங்கருமஞ் செய்துதவஞ் செய்தார் ஆவர் (19) உயர் நட்பு தொழிலாளர் நலங்கருதி உழைக்கும் போழ்து து.ாய் மனத்துக் காந்தியிவண் வந்தார் என்று முழுவாழ்வுத் தமிழ்ப்பெரியார் கானச் சென்றார்; முகஞ்சுருக்கி எற்கானக் குருதி தோய்ந்து பழுதான கைகளொடு வந்தாய்?’ என்று பகர்ந்ததுமே திடுக்கிட்டார் திகைத்து நின்றார்; தொழுதபடி ஒருசொல்லும் கூறா ராகித் துயர்படிந்த மனத்தினராய் இல்லம் சேர்ந்தார் (20) எற்கான - என்னைக்கான