பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 H = அமைதிக்கே நமதுவிரல் அசையும் அல்லால் அறியாது மற்றொன்றும், குருதி ஏது? சுமை மனத்தர் அவர் மனத்தை மாற்றி விட்டார்! சூதறியா நல்லுள்ள மேனும் கீழோர் இமைநொடியில் மாற்றுவரோ? என்று சிந்தித் திணிதிருந்தார்; நோதக்க நட்டார் செய்யின் தமையறியாப் பேதைமையாம் கிழமை யும்.மாம்; தமிழ்நெஞ்சம் வன்சொல்லை மறந்த தன்றே (21) தென்னாட்டில் இந்திமொழி புகுந்த காலை திருநாட்டின் முதலமைச்சர் இவர்க்கு முன்பே பன்னாள்கள் பழகிய நல் நண்ப ரேனும் பைந்தமிழ்க்குத் தீங்குசெய வேண்டா வென்று முன் கூட்டி இடித்துரைத்தார், அல்லல் ஏற்றார்; முகநகுதற் பொருட்டன்று நட்டல், நட்டார் பின்னிர்க்கும் மிகுதிக்கண் இடித்து ரைத்துப் பேசு தற்கே என்ற குறள் தெளிந்து நின்றார் (22) ஈரோட்டுப் பெரியாரும் திரு.வி.க. வும் இனிதுவப்பத் தலைக் கூடிப் பின்பு கொள்கை வே றாகிப் பிரிந்தாலும் உள்ளும் வண்ணம் விலகுதலே மேற்கொண்டார், என்றும் போலச் சீராட்டிப் பேசிடுவார், ஒருகால் ஆள்வோர் சிறைவைத்தார் பெரியாரை என்று கேட்டுச் சாராட்சி நடப்பதுவோ?. சரிந்து மாயும் சமயமிதோ? எனக்கனன்று தலைமை ஏற்றார் (23) ____ - சு மை மனத்தர் . தீமை சுமக்கும் மனத்தினர் முதலமைச்சர் . ஒ , பி. இராமசாமி ரெட்டியார் ஒருமுறை திராவிடர் கழகப் பொதுக்குழு சென்னையில் கூடியது. அக் கூட்டத்தில் அனைவரையுமே ஆட்சியாளர் சிறை செய்தனர். கொதித் தெழுந்த திரு. வி.க காவல்துறை ஆணையாளர் தடையுத்தர வைக் காட்டியுங் கூடக் கண்டனக் கூட்டத்தை வெற்றிபெற நடத்தினார்.