பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | பேரணங்கோ? எந்நாட்டாள்? யாரென்று பேதுற்றேன் காரணங்கள் கண்டவுடன் என்னாட்டாள் என்றறிந்தேன்; தெளிவு சிற்றிடையில் காஞ்சிபுரச் சீலை உடுத்தியதால், சுற்றிமணி மேகலையும் குழுவதால், மார்பகத்துச் சிந்தா மணி என்னும் செம்மணியைப் பூணுவதால், செந்தா மரைபுரையும் சீறடியில் மாண்புமிகு செஞ்சிலம்பு கொஞ்சுவதால், சேர்ந்தெனது நெஞ்சிலுறை வஞ்சியவள் கையில் வளையா பதிகலிக்கக் குண்டலமோ காதணியாய்க் கூடி விளங்குவதால், கண்டாள்மேல் ஐயம் கடித கற்றி அம்மகள்தான் தென்னாட்டுக் காரிகையே செய்ய தமிழனங்கே என்பாட்டிற் கூடும் தலைமகளே என்றுணர்ந்தேன்; புனல் தரு புணர்ச்சி வெற்பின் சுனைநீரால் வேட்கை தணிப்பதற்கு முற்படுவாள் என்வேட்கை மூளுவதைத் தானறியாள்; நீர்பருகுங் காலை நிலைதவறி உள்வீழ்ந்தாள் ஆர்வருவார் காப்பதற்கே ஐயகோ! என்றரற்றத் தாவிக் குதித்தேன் தடந்தோளிற் கொண்டுவந்து நீவிக் கொடுத்தேன்; நிலையுணர்ந்தாள் நின்றாள்; தலைநிமிர்ந்து நோக்கினாள்; தையல் விழிதாம் கொலைநின்ற அம்போ? கொடுவாளோ? கூர்வேலோ? நெஞ்சத்துத் தைக்க நிலைதளர்ந்தேன் நோக்கினேன்; வஞ்சியவள் நாணத்தால் மண்கீறும் கால்விரலைப் பார்த்தாள்; அவளை நான் பாராமல் நிற்குங்கால் பார்த்து நகைசெய்தாள்; பாவையவள் பொன்னகையைக் - - பேதுற்றேன் - மயங்கினேன் வெற்பு - மலை புன்னகை பொன்னகை எனக் கூறப்பட்டதற்கேற்ப உதடுகள் கதவா உருவகம் செய்யப்பட்டன.