பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A). காதற் பெருவழியில் கன்னி துணையாகப் போதல் உளங்கொண்டேன் பொற்கொடியே! என்றேன்; தமிழ் மணம் மறையோர் வருவாரோ? மந்திரங்கள் சொல்லி முறையால் சடங்கெல்லாம் முற்ற முடிப்பாரோ? வேண்டும் திருமணத்தில் வேள்வி நெருப்புண்டோ? ஆண்டு நிகழும் அருவினைகள் சொல்க" எனச், சேயிழையே! நம்மணத்தில் செந்தமிழே பாட்டிசைக்கும் காயெதற்கு நல்ல கனியிருக்க? நீயிருக்க நானும் அருகிருக்க நம் அண்ணல் முன்னிலையில் தேனும் சுவைப்பாலும் சேர்ந்ததுபோல் வாழ்த்தொலிக்க நண்பன் அழகப்பன் நம்மைப் படம்பிடிக்கப் பண்பால் மனமாலை பாவையுனைச் சூட்டிடுவேன் வேற்று மணமுறைகள் வேண்டேன் நமது தமிழ் ஏற்ற செயலொன்றே ஏற்பேன் என மொழிந்தேன்; ஆழச் சுனையகத்தே ஆருயிரைக் காத்தமையால் வேழத் திறலுடையீர்! வென்றுகொண்டீர் என்னுளத்தை; அன்றே உமக்காக ஆக்கிவிட்டேன் மெய்யுயிரை, நன்றே மனம்பெறுவோம் நாயகரே! என்றுரைத்தாள் ; ஒன்றானோம் ஓங்கு மலைக்குறிஞ்சி உண்டாக்கும் ஆறுவந்து தேங்கி மருதத்தைச் சீராக்கிக் காட்டுதல்போல் நற்குறிஞ்சி ஈன்றெடுத்த நங்காய் எனைக்கூடி வற்புடைய வாழ்வை வளமாக்கி வீறளித்தாய்! நன்செய் மருதநிலம் நம்குறிஞ்சிப் பார்வையின்றேல் புன்செய் நிலமுமிலாப் புல்லென்ற பாலைநிலம்; அழகப்பன் - புதுக்கோட்டை அழகப்பா நிழற்பட நிலைய உரிமையாளர். கவிஞரின் நண்பர்.