பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடு கெடுத்தான் நடப்பவர்தம் கால்வருந்த முட்கள் தைக்கும் நச்சரவம் பல நெளியும் கொடிய காட்டைக் கெடுத்தொழித்து நகராக்கிக் கல்விக் கூடம் கிளேத்தெழும்பத் தானுறையும் இல்லும் சேர்த்துக் கொடுத்திருக்கும் இயல்புடையான் ஈட்டுஞ் செல்வம் அத்தனையும் ஈத்துவக்கும் குமணன் போல் வான் படித்துவரும் பன்னுாறு மக்கள் உள்ளம் பைந்தமிழால் அள்ளுறிப் பாடும் வள்ளல் (*) கலைக்கோவில்கள் அகரமுதல் நெடுங்கணக்கை ஒது தற்கும் அடுத்தடுத்த உயர்நிலையில் கற்ப தற்கும் மகளிருயர் கலைக் கல்வி பயிலு தற்கும் * மானுக்கர் கலஎழிலே அறிவ தற்கும் தகவுடைய ஆசிரியப் பயிற்சிக் கென்றும் தளராத உடற்கல்வி கற்றற் கென்றும் புகலரிய விஞ்ஞானம் தொழில்நு னுக்கம் பொறியியல் என் றத்தனைக்கும் கோவில் கண்டான் (ão) மழலைமொழிச் செல்வங்கள் மாண்டி சோரி வகுத்தமுறை பழகு தற்கும் நிலையங் கண்டான் அழகியபொற் சித்திரமாம் அவர்ந லத்தில் அவன் கொண்ட அன்புரைக்க அளவும் உண்டோ ? அழகனிவன் கொடைபெற்ற கல்விக் கோவில் அருமைமிகு தமிழகத்தில் யாண்டுந் தோன்றும் பழுத கற்றும் கல்வியறம் மேலாம் என்ற பாரதியின் கருத்துணர்ந்தான் அதனைச் செய்தான் (0க) 58