பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட் டாமல் கொவ்வைக் கனியிதழாம் நற்கதவால் பூட்டி மறைத்துவைத்தாள்; பூவை யிமையசைவு வாவா வென் றென்னே வரவேற்புச் செய்வதுபோல் சாவாமல் என்னுயிரைத் தாங்க உதவியதே ! அப்பார்வை நன்றி அறிவிப்போ ? அல்லாமல் தப்பா என் காதலுக்குத் தக்க பரிசளிப்போ ? குறிப்பறிதல் என்று தடுமாறி ஏங்குங்கால் வேல்விழியில் ஒன்றும் குறிப்புணர்ந்தேன் ஒப்புதலைக் கண்டுகொண்டேன்; ஓர் நொடியில் இத்தனை யும் ஒன்ரு ய் நிகழ்ந்தனவே கார் கண்ட தோகைமயில் ஆனேன். கணப்பொழுதில்; கோலக் குறிஞ்சியிடைக் கூடிவரும் ஆருேடி நீலக் கடலோடு நேர்ந்து கலப்பதுபோல் குன்றிற் பிறந்த குறமகளே ! என்னெஞ்சில் ஒன்றிக் கலந்துவிட்டாய் ஒருயிர் நாம் என்றேன் ; * மலைக்குறவர் பெண்ணுக்கு மாலையிட உங்கள் குலப்பெருமை ஒப்புமோ ? கூறுகநீர் என்றுரைத்தாள் ; சாதி நமக்கில்லை சாதிப் பிணக்கெல்லாம் சங்கத் தமிழ் மாந்தர் ஆதிப் பழக்கமன் றல் வழியில் வந்தவன் நான் கீழ்மைக் குண மெல்லாம் கெட்டொழியப் புத்துலக வாழ்வுக் குழைத்துவரும் வாலிபன் நான் மேலும் குறிஞ்சிநில மக்கள் குறவரெனச் சொல்வர் புரிந்தவர்கள் இக்குலத்தைப் புன்மைஎனப் பேசார் மலேமுகட்டில் நிற்கின் ருேம் மண் மீ திருப்பார் நிலவிட்டு நல்ல நெறிசெல்வோம் ஆதலினல் 80