பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருவழியில் கன்னி துணையாகப் போதல் உளங்கொண்டேன் பொற்கொடியே! என்றேன் ; தமிழ் மணம் மறையோர் வருவாரோ ? மந்திரங்கள் சொல்வாரோ ? முறையாய்ச் சடங்கெல்லாம் முற்ற முடிப்பாரோ ? வேண்டும் திருமணத்தில் வேள்வி நெருப்புண்டோ ? ஆண்டு நிகழும் அருவினைகள் சொல் க எனச் சேயிழையே ! நம்மணத்தில் செந்தமிழே பாட்டிசைக்கும் காயெதற்கு நல்ல கனியிருக்க ? நீயிருக்க நானும் அருகிருக்க நம் அண்ணல் முன்னிலையில் தேனும் சுவைப்பாலும் சேர்ந்ததுபோல் வாழ்த்தொலிக்க நண்பன் அழகப்பன் நம்மைப் படம்பிடிக்கப் பண்பாய் மணமாலே பாவையுனைச் சூட்டிடுவேன் வேற்று மணமுறைகள் வேண்டேன் நமது தமிழ் ஏற்ற செயலொன்றே ஏற்பேன் என மொழிந்தேன் ; ஆழச் சுனையகத்தே ஆருயிரைக் காத்தமையால் வேழத் திறலுடையீர் ! வென்றுகொண்டீர் என்னுளத்தை ; அன்றே உமக்காக ஆக்கிவிட்டேன் மெய்யுயிரை ; நன்றே மணம்பெறுவோம் நாயகரே ! என்றுரைத்தாள் ; ஒன்ருளுேம் ஓங்கு மலைக்குறிஞ்சி உண்டாக்கும் ஆறுவந்து தேங்கி மருதத்தைச் சீராக்கிக் காட்டுதல் போல் நற்குறிஞ்சி ஈன்றெடுத்த நங்காய் எனக் கூடி வற்புடைய வாழ்வை வளமாக்கி வீறளித்தாய் ! நன்செய் மருதநிலம் நம்குறிஞ்சிப் பார்வையின்றேல் புன் செய் நிலமுமிலாப் புல்லென்ற பாலைநிலம் ; 81