பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


துவங்கினார். அவர் ஆரம்பித்த பள்ளியிலே தொடக்க காலத்தில் தனது மகளுட்பட ஐவரைத்தான் சேர்க்க முடிந்தது. நாளடைவில் அதே பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பள்ளி, பழங்காலத்தில் சான்றோர்கள் கற்ற கல்வியைப் போல, ஒழுக்கம், தியானநிலை, இறை வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய எளிய வாழ்க்கை போன்று போல நடைபெற்றது.

பள்ளிக் கூடங்களைப் பற்றித் தாகூர் கூறிய கருத்துக்கள் என்ன வென்றால், ஏராளமான பெரிய பெரிய கட்டடங்கள் தேவையில்லை. பொருள்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை பள்ளி நடத்துபவர்களுக்கு வரக் கூடாது. அதுதான் இன்ப வாழ்வு என்ற எண்ணமே எழக்கூடாது. எளிமையில் செம்மை என்ற விதிப்படிபள்ளிகள் இயங்கவேண்டும்.அப்போதுதான் அங்கே அமைதி தவழும்; இயற்கை நிலையோடு ஒன்றி வாழும் எண்ணங்கள் தோன்றும். நகரங்களின் நெருக்கடிகளுக்கு நடுவே பள்ளிகளை நடத்தக்கூடாது. காடுகள் போன்ற இயற்கைச் சூழலில் பாதுகாப்போடு பள்ளிகள் அமைவது எல்லாநலன்களுக்கும் நல்லது” என்றார்.

சாந்தி நிகேதன் நடைமுறைகள்

சாந்தி நிகேதன் பள்ளியிலே புதிதாக ஒருவர் புகுந்தால் அவ்வளவு விரைவில் அவர் வெளியே வர முடியாது. மெய் மறந்து அங்கேயே தங்கி விடலாமா? என்று நினைப்பார். பாடம் நடந்தநேரம் போக மிகுதியான வேளைகளில் பாட்டும் இசையுமே பெருகிக் காட்சி தரும்.