பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 கவியின் கனவு ஊர்வ தாங்கள் பரத நூல் இலக்கணங்களை எங்குக் கற்றீர்கள்? மணி பெரியோர்கள் அரும்பாடுபட்டுக் கோயில்களிற் செதுக்கிய சிற்பங்களிலிருந்தும், கண்ணியமுள்ள கலைஞர் உழைப்பிலிருந்தும். ஊர்வ எவன் கொலையாளியை விடக் கொடியவன்? மணி சுயநலங்கொண்டு மித்திரபேதம் செய்யும் படு பாவி, ஊர்வ நெஞ்சைப் பிளப்பது? மணி நண்பனின் பிரிவு. ஊர்வ நட்பின் அழகு? மணி இடுக்கண் களைவது. ஊர்வ துயரத்தின் காரணம்? மணி பேராசை, ஊர்வ எதிர்க்க முடியாத சக்தி? மணி தாயின் வேண்டுகோள். ஊர்வ : இன்பத்திற் சிறந்தது? மணி அமைதி இன்பம். ஊர்வ அதனினும் சிறந்தது? மணி பெற்ற தாயும் பிறந்த பொன்னோடும். ஊர்வ என்றும் நிலையானது? மணி சத்தியந்தான் தாயே! ஊர்வ அழகான மொழிகளை ೨®ಹಹ®ಹಿತ,755 பேசு கின்றீர்கள்! மணி நம் தாய்மொழிக்கே வாய்த்துள்ள தனிச் சலுகை யம்மா அது. -