பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவியின் கனவு 战的芦了砷矿 கவி களிலே அவளது வண்ணச் சிலம்பொலியைக் கேட்கிறேன். தென்றலின் வீணையில் அவளது தேன்பாட்டைக் கேட்கிறேன். மீண்டும் மீண்டும் அவள் தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்று என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறாள். அதோ, என் புனித தெய்வும், உயிரின் துணை ஆத்மாவின் அமரதீபம் , (பின்னணி வானப் படுதாவிலே வாணியின் . உருவம் கலைந்த ஒவியம்போல் காட்சி தருகிறது பின்னணியின் சாமா இராகம் ஒவிக்கட்டும்) இல்லை வாணி எக்காரணங்கொண்டும் உன் குழந்தைகளை நான் பிரிய மாட்டேன். உனக்குத் தந்த வாக்கினை மறக்கமாடேன். என் கடமையை நான் செய்தே தீருவேன். வாணி - வாணி வாணி! (உரு வெளித் தோற்றம் மறைதல்) அய்யா. மன்னிக்கனுங்கய்யா. உங்களுக்கு அம்மா நினைவு வர நானே காரணமாயிட்டேன். ஆமாங்கய்யா, அம்மா எப்படித்தானுங்கய்யா இறந்தாங்க? - - அந்த அமரதேவதை இறக்கவில்லையப்பா. பாவிகளால் கொல்லப்பட்டாள். சாட்சி எங்கே என்று கேட்டது இந்தச் சதிகார உலகம் மனச் சான்று என்று ஒன்று இருந்தால், அது அந்தக் கொலைஞர்களை ஒருநாள் இந்த உலகுக்கு அடையாளம் காட்டியே தீரும். தருமத்தின் நாடகம் அதிக நேரம் தனது அறத்திரையை மூடிவைக்காது, தம்பி, விரைவில் மாயத் திரைகள் அனைத்தும் அற்று விழப்போவது உறுதி! உண்மைகள் இந்த உலக நாடக மேடையில் நடமாடப்போவது நிச்சயம். அதை மக்கள் கண்டு மகிழப்போவதும் உறுதி.