பக்கம்:கவி பாடலாம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்த வகை - 101

தேடும் கயமா முகனைச் செருவில் சாடுந் தனியா னைசகோதரனே.”

கலி விருத்தங்களில் இன்னும் பலவகை உண்டு.

வஞ்சி விருத்தமும் வஞ்சித் துறையும் வஞ்சி விருத்தம் மூன்று சீரடிகள் நான்கினால் வரும்.

“சோலை யார்ந்த சுரத்திடைக் காலை யார்கழ லார்ப்பவும் மாலை மார்பன் வருமெனின் நீல வுண்கண் இவள்வாழும்.” இது வஞ்சி விருத்தம்.

பாதம் பரவிப் பணியின் ஏதம் எதுவும் இல்லாப் போதம் அருளிப் புகுவான் கோதில் கருணைக் குமரன். இதுவும் வஞ்சி விருத்தம். இதனோடு தொடர்ந்து வேறு ஒன்றையும் தெரிந்து கொண்டால் நினைவில் நன்றாகப் பதியும்.

இரண்டு சீரடிகள் நான்கு வந்தால் - அதற்கு வஞ்சித்துறை என்று பெயர்.

‘கண்ணன். கழலிணை

நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே.”

இது நம்மாழ்வார் வாடல்; வஞ்சித் துறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/102&oldid=655689" இலிருந்து மீள்விக்கப்பட்டது