பக்கம்:கவி பாடலாம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து, அசை, சீர் i 15

|நெறியே வரினும்-முறையாக வந்தாலும். நிரைந்து வரிசையாக நின்று. வேய்புரையும் மென் தோளி-மூங்கிலை ஒத்த மெல்லிய தோளையுடைய பெண்ணே. ஒரு பெண்ணை நோக்கிப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல ஆசிரியர் பாட்டைப் பாடியிருக்கிறார். பெண்ணை முன்னிலையாக வைத்துப் பாடினால் அதை மகடூஉ முன்னிலை எபர். (மகடுஉ-பெண்) வேண்டுவர்-புலவர்கள் விரும்புவார்கள்.)

சீர்கள் ஒன்று முதல் நான்கு அசைகளால் அமையும். ஒரன்சைச் சீர் இரண்டு. அவற்றை அசைச் சீர் என்றும் சொல் வார்கள். நேர் என்ற ஒரசைச் சீருக்கு நாள் என்பது வாய்பாடு. நிரை என்ற ஓரசைச் சீருக்கு மலர் என்பது வாய்பாடு.

ஈரசைச் சீர்கள் நான்கு: தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்பன. இவற்றை ஆசிரிய உரிச்சீர், அகவற்சீர், இயற்சீர் என்று கூறுவர்.

மூவசைச் சீர்கள் காய்ச்சீர், கணிச்சீர் என இரு வகைப் படும். காய்ச்சீர் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என நான்கு. இவற்றை வெண்பா உரிச்சீர், வெண்சீர் என்று கூறுவர். - கணிச்சீர் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என நான்கு. இவற்றை வஞ்சி உரிச்சீர், வஞ்சிச்சீர் என்று கூறுவர்.

நாலசைச் சீர்கள் பதினாறு. தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், என்ற நான்கோடு தண்பூ தண்ணிழல், நறும்பூ நறுநிழல் என்ற நான்கையும் தனித்தனியே சேர்த்தால் பதினாறு சீர்கள் வரும். இவற்றைப் பொதுச்சீர் என்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/116&oldid=655704" இலிருந்து மீள்விக்கப்பட்டது