பக்கம்:கவி பாடலாம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளை 117

ஆனால் நிற்கும் சீர் ஈரசைச் சீராக இருந்தால்தான் ஆசிரியத்தளை வர முடியும்.

காமன் வேவக் கண்ட கண்ணன் யாமம் ஆடும் எந்தை யானைத் தோலைப் போர்த்த சோதி காலைப் பற்றிற் காமம் போமே.

இந்தப் பாடலில் எல்லாச் சீர்களுமே தேமாவாக வந்தன. பாட்டு முழுவதும் நேரொன் றாசிரியத்தளை வந்தது காண்க. r

“திருமழை பொழிந்திடும் இருணிற விசும்பின் விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைந்தவர்தேர் சென்ற வாறே.”

இந்தப் பாட்டில் திருமழை-பொழிந்திடும் என்பதில் நிரையொன் றாசிரியத்தளை வந்தது. பொழிந்திடும். இருணிற, இருணிற-விசும்பின், விண்ணதி-ரிமிழிசை, ரிமிழிசை-கடுப்ப, பண்ணமைந்தவர்தேர் என்னும் இடங்களில் எல்லாம் நிரையொன் றாசிரியத்தளையே வந்திருக்கிறது. விசும்பின்-விண்ணதிர் என்பது நேரொன் றாசிரியத்தளை. கடுப்பப்-பண்ணமை என்பதும் அது. அவர்தேர்-சென்ற, சென்ற-வாறே என்ற இடங்களிலும் நேரொன் றாசிரியத்தளை வந்தது. +

நின்ற சீர் ஆசிரியச் சீராக இருக்க, வரும் சீர் முதல் அசை ஒத்து நின்றால் ஆசிரியத் தளையாகும்; ஒவ்வாமல் நின்றால் இயற்சீர் வெண்டளையாகும் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வது நலம்.

சற்றே விளக்கமாகப் பார்த்தால் இயற்சீர் அல்லது ஈரசைச்சீர் நிற்க, எந்தச் சீர் வந்தாலும் இயற்சீர் வெண்டளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/118&oldid=655706" இலிருந்து மீள்விக்கப்பட்டது