பக்கம்:கவி பாடலாம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற தொடைகளும் வகையும் i43

(1) இறுதிச் சீர்களெல்லாம் ஒன்றஅமைப்பது கடை,

“கயன்மலைப் பன்ன கண்ணிணை கரிதே தடநகில் திவளும் தனிவ்டம் வெளிதே நூலினும் துண்ணிடை சிறிதே ஆடமைத் தோளிக் கழகோ பெரிதே’

இதில் கடைமுரண் வந்தது.

(2) கடை இரு சீரும் ஒன்றி வரத் தொடுப்பது கடையினை.

வேதம் உணர்ந்து விதித்த மதித்தறிந்தே இதில் கடையினை எதுகை வந்தது. (3) இறுதிச் சீரும் இரண்டாஞ் சீரும் ஒன்றி வரத் தொடுப்பது பின். .

ஏதுமின்றி யாவுமறிந்தின்புற்றங் காவலொடும். இதில் பின் எதுகை வந்தது. - (4) முதற் சீரையன்றி மற்ற மூன்றிலும் ஒன்றி வரத் தொடுப்பது கடைக்கூழை.

ஈசன் திருவடியைத் தேர்ந்து தெளிவார்க்கு. இதில் கடைக்கூழை மோனை வந்தது. (5) இடையில் உள்ள இரண்டாவது மூன்றாவது சீர்கள் ஒன்றிவரத் தொடுப்பது இடைப்புணர் தொடை.

பாசவினைத் தொல்லையெலாம் ஒல்லையினிற் பாறுமே. இதில் இடைப்புணர் எதுகை வந்தது. இதுவரைக்கும் சொன்ன தொடைகளின் வகைகளைத் தொகுத்து நினைவு கொள்வது நலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/144&oldid=655738" இலிருந்து மீள்விக்கப்பட்டது