பக்கம்:கவி பாடலாம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கவி பாடலாம்

(1) அடிதோறும் முதலில் ஒன்றி வருவது அடிமோனை முதலியனவாகத் தொடைக்கு ஏற்பப் பெயர் பெறும். -

(2) அடிதோறும் இறுதிச் சீர் ஒன்றி வருவது கடைமோனை முதலியனவாகப் பெயர் பெறும்.

குறிப்பு: இயைபுத் தொடைக்கு மாத்திரம் தலை கீழாகப் பார்த்துப் பெயர் சொல்ல வேண்டும்.

மற்ற வகைகள் பின்வருமாறு அமையும்: (மோனைத் தொடையைச் சார்த்தி உதாரணம் சொல்லப் பெற்றாலும் மற்றத் தொடைகளுக்கும் பொருத்திக் கொள்ள வேண்டும்).

சீர் எண் பெயர்

I-2 இணை மோனை

1-3 - பொழிப்பு மோனை 1-4 ஒரூஉ மோனை

1-2-3 கூழை மோனை

1-3-4 மேற்கதுவாய் மோனை 1-2-4 கீழ்க்கதுவாய் மோனை 1-2-3-4 முற்று மோனை

3-4 கடையிணை மோனை

2-4 பின் மோனை

2-3-4 கடைக்கூழை மோனை

2-3 இடைப்புணர் மோனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/145&oldid=655739" இலிருந்து மீள்விக்கப்பட்டது