பக்கம்:கவி பாடலாம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆசிரியத் தாழிசையும் துறையும்

ஆசிரியப்பா நான்கு வகைப்படும் என்பதை முன்பு பார்த்தோம். நேரிசைஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்ற நான்கு வகைகளின் இலக்கணத்தையும் முதற் பாகத்தில் அறிந்தோம். இனி, ஆசிரியப்பாவின் இனங் களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியத் தாழிசை ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூவகைப்படும். அள வொத்து அமைந்த மூன்று அடிகளால் வருவது ஆசிரியத் தாழிசை. ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வருவது சிறப்பு.

வேலினை எடுத்தனை விண்ணவர்க் கருளினை மாலற அன்பர் மனத்தில் இருந்தனை காலுற வணங்கினம் கருணையை அருள்தியே. இது ஒரு பொருள் மேல் ஒன்று வந்த ஆசிரியத் தாழிசை,

“கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி.”

“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/159&oldid=655754" இலிருந்து மீள்விக்கப்பட்டது