பக்கம்:கவி பாடலாம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கவி பாடலாம்

வேந்தமலி யுங்கடம்ப வள்ளியொடு மமரர்கரி

காந்தமலை வில்லாயென் றாதரித்தால் புவியிலிடர்

காணா மன்றே.

இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, மற்ற அடிகள் மூன்றும் ஒத்து வந்த ஆசிரியத் துறை. மூன்றாவது அடியும் ஒத்திருந்தால் இது ஆசிரிய விருத்தமாகிவிடும்.

2. “வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய்

வடிவே போலத் தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித்

தணந்தோன் யாரே - தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டையப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து

படர்ந்தோ னன்றே.” இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடை மடக்காய் வந்த ஆசிரியத்துறை.

இரண்டாம் அடியில் வந்த தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி என்ற பகுதியே மூன்றாமடியில் மீட்டும் மடக்கி வந்தமையின் இடைமடக்காயிற்று.

3. “கொன்றார்ந்தமைந்த குருமுகத் தெழினிறக்

குருதிக் கோட்டன. இருந்தடப் பெருங்கைக் குன்றாமென அன்றாமெனக் குமுறா நின்றன. கொடுந்தொழில்,வேழம்

வென்றாங் கமைந்த விளங்கொளி இளம்பிறைத்

துளங்குவாள் இலங்கெயிற் றழலுளைப் பரூஉத்தாள் அதிரும் வானென எதிரும் கூற்றெனச் சுழலா நின்றன சுழிகண் யாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/161&oldid=655757" இலிருந்து மீள்விக்கப்பட்டது