பக்கம்:கவி பாடலாம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சகக் கலிப்பா வகை 183

(தாழிசை)

இளநலம் இவள்வாட

இரும்பொருட்குப் பிரிவாயேல் தளநல முகைவெண்பற்

றாழ்குழல் தளர்வாளோ? (1)

நகைநலம் இவள்வாடத்

தரும்பொருட்குப் பிரிவாயேல் வகைநலம் இவள்வாடி -

வருந்திஇல் இருப்பாளோ? (2)

அணிநலன் இவள்வாட

அரும்பொருட்குப் பிரிவாயேல் மணிநலன் மகிழ்மேனி

மாசொடு மடிவாளோ? - (3)

நாம்பிரியோம் இனியென்று

நறுநுதலைப் பிரிவாயேல்

ஓம்பிரியோம் எனவுரைத்த -

உயர்மொழியும் பழுதாமோ? (4)

குன்றளித்த திரள்தோளாய்

கொய்புனத்திற் கூடியநாள் அன்றளித்த அருள்மொழியால்

அருளுவது மருளாமோ? (5)

சில்பகலும் ஊடியக்கால்

சிலம்பொலிசீறடிபரவிப் பல்பகலும் தலையளித்த

பணிமொழியும் பழுதாமோ? (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/184&oldid=655782" இலிருந்து மீள்விக்கப்பட்டது