பக்கம்:கவி பாடலாம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா i85

பூந்தொத்துக் கொத்தவிழ்ந்த

புனத்துழாய் நீழல்வளர்

தேந்தத்து நறைக்கஞ்சத்

தஞ்சாயல் திருந்திழையும்

மனைக்கிழவன் திருமார்பும்

மணிக்குறங்கும் வறிதெய்தத் தனக்குரிமைப் பணிபூண்டு

முதற்கற்பின் தலைநிற்ப

அம்பொன்முடி முடிசூடும்

அபிடேக வல்லியொடும் செம்பொன்மதில் தமிழ்க்கூடல்

திருநகரம் பொலிந்தோய்கேள்.

(தாழிசை)

விண்ணரசும் பிறஅரசும்

சிலரெய்த விடுத்தொருநீ பெண்அரசு தரக்கொண்ட

பேரரசு செலுத்தினையே. {1.

தேம்பழுத்த கற்பகத்தின்

நறுந்தெரியல் சிலர்க்கமைத்து

வேம்பழுத்து நறைக்கண்ணி

முடிச்சென்னி மிலைச்சினையே. (2)

வானேறும் சிலபுள்ளும்

பலர்அங்கு வலனுயர்த்த மீனேறோ ஆனேறும் -

விடுத்தடிகள் எடுப்பதே. (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/186&oldid=655784" இலிருந்து மீள்விக்கப்பட்டது