பக்கம்:கவி பாடலாம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. மருட்பா

மருட்பா என்ற பாவகை ஒன்று உண்டு. அது நால் வகைப் பாக்களில் ஒன்றாகிய வெண்பாவும் ஆசிரியப்பா வும் இணைந்து வருவது. அதாவது முதலில் பல அடிகள் வெண்பா அடிகளாக அமைய, பின்னுள்ள அடிகள் ஆசிரியப்பா அடிகளாக அமையும். முதலில் வெண்பாவோ என்று தோன்றச் செய்து, முடிவில் ஆசிரியப்பாவோ என்று ஐயுறச் செய்வதால் இதற்கு மருட்டா என்ற பெயர் வந்தது போலும் மருள்மயக்கம்.

அடியிலக்கணத்தால் மருட்பா எல்லாம் ஒரு வகையாகவே அமையும். ஆனால் பொருளைக் கருதி அதை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். வேறு பாக்களில் இவ்வாறு பொருளை நோக்கிய பிரிவு இல்லை. புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறுஉ மருட்பா என்பவை அந்த நான்கு

Y.

புறநிலை வாழ்த்து என்பது, உன்னுடைய தெய்வம் உன்னைப் பாதுகாக்க, நீ சிறந்து வாழ்வாயாக!’ என்ற பொருள் அமையப் பாடுவது.

என்றும் இளையான் எழிலான் திருமுருகன் நன்றருளிக் காப்ப நலஞ்சிறந்து கன்றலின்றிச் சீரும் பொருளும் தெருளும் மிகப்பொலிய ஆரும் புகழ அறிவோர்தம் நட்பமைய நாளும் நாளும் வாழிய கேளும் நண்பரும் கெழுமிப் பொலியவே. இதில், முருகன் காக்க வாழ்வாயாக’ என்ற பொருள் அமைதலின், இது புறநிலை வாழ்த்து மருட்டா. இதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/206&oldid=655806" இலிருந்து மீள்விக்கப்பட்டது