பக்கம்:கவி பாடலாம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கவி பாடலாம்

பாட்டின் சீர் முதலியன கெட்டுப் போகும். இப்படிப் பிரித்துப் பாடுவது பிழை. இந்தப் பாட்டை,

காதலனும் காதலியும் கண்டு மனமகிழ்ந்தே ஆதரவில் வாழ்வர் அமைந்து என்று திருத்தியமைத்தால் இலக்கணப் பிழையின்றி நிற்கும்.

‘எந்தன்’ என்ற சொல்லை எதுகையில் வைத்துப் பாடுபவர் உண்டு. .

கந்தன் கமலக் கழலடியே எந்நாளும் எந்தன்றுணையென் றிரு.

இங்கே கந்தன் என்பதனோடு எதுகை சேர்ந்து எந்தன் என்ற சொல் இருக்கிறது. அது பிழை. என்+தன் என்பன சேர்ந்தால் என்றன் என்றே வரும். எந்தன் என்பதைப் பிரித்தால் எம் தன் எனப் பிரியும். எம் என்பது பன்மை; தன் என்பது ஒருமை. இரண்டும் இணைந்து வருவதில்லை. எந்தம் என்று வந்தால் பிழையன்று. +

எதுகையில் இரண்டாம் எழுத்து ஒன்றுவதோடு முதல் எழுத்திலும் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். முதல் எழுத்து நெடிலானால் எதுகையில் ஒன்றும் மற்றச் சொல்லின் முதல் எழுத்தும் நெடிலாக இருக்க வேண்டும். கட்டு என்பதற்குப் பாட்டு என்பது எதுகையாகாது; பட் என்பதே எதுகையாகும். -

கந்த முருகா கடம்பா குறத்தியணை வேந்தா எனவே விளம்பு. இதில் ந்தா என்ற இரண்டெழுத்துக்கள் ஒன்றி வந்தாலும் எதுகை ஆவதில்லை. முதலெழுத்துக் குறில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/217&oldid=655819" இலிருந்து மீள்விக்கப்பட்டது