பக்கம்:கவி பாடலாம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கவி பாடலாம்

க-வருவதே சிறப்பு. க, கா, கை, கெள என்ற நான்கும் ஒன்றுக்கு ஒன்று மோனையாக வரும்.

கண்ணனைத் தொழுது நிற்கும்

கருத்துடை அன்பர் இன்னோர்

என்பதில் க-வுக்குக் க-வே மோனையாக வந்தது.

கந்தனை முருக னைச் செங்

கால்பணிந் திடுவார் மேலோர்

என்பதில் க-வுக்குக் கா-மோனையாக வந்தது.

கருத்தினில் வஞ்சங் கொண்டு

கைதொழு வாரை நம்பேல். இதில் க-வுக்குக் கை-மோனையாக வந்தது.

கழுத்தினில் வாயை வைத்துக்

கெளவிய புலியைக் கண்டான்.

இதில் ககரத்துக்குக் கெள-மோனையாக வந்தது. இவ் வாறன்றிக்க-வுக்குக் கி-யோ, மேலே சொன்ன எழுத்துக்கள் அல்லாத எழுத்துக்களோ மோனையாக வருவதில்லை.

க-என்பது உயிர்மெய் எழுத்து; க்-என்ற மெய்யோடு அ-என்ற உயிர் சேர்ந்து உண்டானது. தனி உயிராக அடிக்கு முதலில் வந்தால் தனி உயிரே மோனையாக வர வேண்டும். அந்த வகையில் அ-ஆ-ஐ-ஒள என்ற நான்கும் ஒன்றுக்கு ஒன்று மோனையாக வரும்.

உயிர் மெய்யெழுத்துக்களில் மெய்யெழுத்து ஒன்றாகவே இருக்க வேண்டும்; அதனோடு சேர்ந்த உயிரெழுத்து மேலே சொன்ன மோனைக்குரிய எழுத்துக்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். க-என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/23&oldid=655833" இலிருந்து மீள்விக்கப்பட்டது