பக்கம்:கவி பாடலாம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

$3.

53.

கவி பாடலாம்

ஒற்றுக்கள் இடையில் வந்தால் இப்படி அமைவது உண்டு. தாயுமானவர் பாடலில், ‘அங்கிங்கெனாதபடி: என்பது போல வரும் விருத்தங்களைப் பதினான்கு சீர் விருத்தங்களாகக் கொள்வதா? பன்னிரு சீர் விருத்தங்களாகக் கொள்வதா?

பன்னிரு சீர் விருத்தமாகவே கொள்வது நலம்.

“அங்கிங் கெனாதபடி எங்கும்ப்ர காசமாய்

ஆனந்த பூர்த்தி யாகி” என்ற அரையடியில் ஆறாவது சீரை இரண்டாக்கிக் கணக்குப் பண்ணலாமென்று தோன்றும். ஆனால் எல்லா இடங் களிலும் அப்படிக் கணக்குப் பண்ண முடியாது. -

“தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினில்”

என்பதில் உள்ள ஆறாவது சீர் மனவாக்கினில்”. அதை மனவாக் கினில் என்று பிரித்தால் கினில் ஒரு சீர் ஆகாது. ஆகையால் எல்லாவற்றையும் ஒரே சீராகக் கொள்வதே பொருத்தம். அப்போது ‘பூர்த்தியாகி’ என்பது கூவிளங்காய் ஆகும்.

ஆசிரியப்பாவுக்கு ஆசிரியத் தளையே வர வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டா?

இல்லை. கவிதை எழுதும்போது முதலடி எவ்வளவு நீளம் இருக்கிறதோ அதே அளவாகத்தான் மற்ற அடிகள்

இருக்க வேண்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/239&oldid=655843" இலிருந்து மீள்விக்கப்பட்டது