பக்கம்:கவி பாடலாம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 241


61.

செய்யுள் வடிவத்திலுள்ள உரையைக் காரிகை என்பது வடநூல் வழக்கு. தமிழில் யாப்பருங்கலம் என்ற இலக்கண நூலுக்கு வழி நூலாக யாப்பருங்கலக் காரிகை எழுந்தது. அந்தப் பெயர் வடமொழி வழக்கைத் தழுவி அமைந்ததென்றே தோன்றுகிறது. அது கட்டளைக் கலித்துறையால் அமைந்தது. நாளடைவில் காரிகை என்னும் பெயர் கட்டளைக் கலித்துறை காரணமாக வந்த தென்று கருதிக் கட்டளைக் கலித்துறைக்கும் காரிகையென்ற பெயரை வைத்து வழங்கத் தொடங்கினர் போலும்!

கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பாவைத் தவிர, மற்றப் பாப் பாவினங்களில் கட்டளை பெறுவதுண்டா?

இலக்கணத்தில் இந்த இரண்டு பாடல்களுக்குமே எழுத்துக் கணக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒருவகைக் கலி விருத்தத்தில் ஒரடிக்கு முதலில் நிரை வந்தால் 12 எழுத்தும், நேர் வந்தால் 11 எழுத்தும் இருக்கும். கட்டளைக் கலிப்பாவின் அரையடியையே ஒரடியாகக் கொண்டது போன்றவை இந்த விருத்தங்கள்.

‘உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலு நீக்கலு நீங்கலா வலகி லாவிளையாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க கேசர ணாங்களே”

என்ற கலிவிருத்தத்தில் ஒரடிக்கு 12 எழுத்துக்கள் இருக்கும்.

&, Lim.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/242&oldid=655847" இலிருந்து மீள்விக்கப்பட்டது