பக்கம்:கவி பாடலாம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியும் ஓசையும் 35

தனதன தனன தான

தானன தான தான

தனதன தான தான

தானன தான தான.

இதைச் சொல்லிச் சொல்லி ஓசையைக் கவனியுங்கள்.

தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை, கம்பன் பாட்டில் உள்ள அறுசீர் விருத்தப் பகுதிகள் முதலியவற்றை அடுத்தடுத்துப் படியுங்கள். ஒசை ஒரு விதமாகக் காதுக்குப் பழக்கமான பிறகு பின்னே வரும் பயிற்சியைச் செய்து பாருங்கள.

செய்யுளை எழுத வேண்டி

- முயற்சி செய்தால் பையவே ஓசை -

பாங்கினைப் பார்த்தல் வேண்டும் செய்வது திருந்தச் செய்தால்

- வெற்றி எய்தும்; மையறு கவிதை பாடும்

-- சேரும். இந்தப் பாட்டு ஆறு சீர் விருத்தம். இதந்தரு என்று ஆரம்பித்த பாட்டில் முதலில் தனதன என்று வாய்பாடு போட்டோம். இது செய்யுளை என்று தொடங்குவதனால் ‘தானன என்று போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாட்டில் சில சீர்களை விட்டு வைத் திருக்கிறேன். அவற்றை நிரப்ப முயன்று பாருங்கள். முதலில் வார்த்தைகளைப் போடுவதற்குப் பதிலாகத் தக்கையைப் போல வாய்பாட்டைப் போட்டுப் பாடுங்கள். அர்த்தத்தைப் பற்றிச் சிறிதும் இப்போது கவலைப்பட வேண்டாம். விடப்பட்ட சீர்களை வாய்பாட்டால் நிரப்பிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/36&oldid=655870" இலிருந்து மீள்விக்கப்பட்டது