பக்கம்:கவி பாடலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கவி பாடலாம்

L!i!- பாடுவதில்லை. ஆகவே, எண் சீர் விருத்தப்படி அதை அமைத்தால் ஒட்டி வராது. மற்ற அடிகளெல்லாம் ஒத்து வந்திருப்பதைக் காண்க.

எண்சீர் விருத்தத்தில் காய்சீர் வரும் சில இடங்களில் விளச்சீர் வரலாம். மேலே உள்ள தாண்டகத்தில் இரண்டாவது அடி ஆரம்பத்தில் மங்குவார் என்று விளச்சீர் வந்திருப்பதைக் காண்க.

இனி வேறு வகை எண்சீர் விருத்தமும் தமிழ் இலக் கியத்தில் மிகுதியாகப் பயின்று வருகிறது. இராமலிங்க சுவாமிகள் பாடல்களில் இந்த வகை விருத்தம் அதிகம்.

‘வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட

மரபினில்யா னொருவனன்றோ வகையறியே னிந்த ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு

மகனலவோ நீயெனக்கு வாய்த்ததந்தை யலவோ கோழையுல குயிர்த்துயர மினிப்பொறுக்க மாட்டேன்

கொடுத்தருணின் னருளொளியைக் கொடுத்தருளிப் - பொழுதே.” இது இராமலிங்க சுவாமிகள் பாடல். அரையடியில் முதல் மூன்றும் காய்ச்சீராக்வும் நான்காவது மாச்சீராகவும் வந்துள்ளன. மாச்சீரில் தேமா, புளிமா என்னும் இரண்டும் வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். கூட்ட, னிந்த, தானோ, மாட்டேன் என்பவை தேமாச் சீர்கள்; மதமோ, உனக்கு, யலவோ, பொழுதே என்பவை புளிமாச்சீர்கள். திருவருட்பாவில் உள்ள இத்தகைய பாடல்களைப் படித்துப் படித்துப் பழகினால் எளிதில் பாட வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/59&oldid=655895" இலிருந்து மீள்விக்கப்பட்டது