பக்கம்:கவி பாடலாம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல் - 61

பாரதியார் இயற்பாட்டைப் போலவே இசைப் பாட்டையும் எளிதில் ஆண்டார். இசைப் பாடல்களில் இசைக்குத் தலைமை இருக்கும்; கவிச்சுவை இரண்டாம் பட்சமாக இருக்கும். பாரதியார் செய்த பெரிய புரட்சி, இசைப் பாடல்களாகிய கண்ணிகளையும் சிந்துகளையும் இலக்கியச் சுவை உடையனவாகச் செய்தது. தேவாரம் எப்படிப் பண் அமைந்து இசைப்பாவாகவும், சிறந்த கவிச்சுவை அமைந்து இலக்கியப் பனுவலாகவும் இருக்கிறதோ அவ்வாறு பாரதியார் இசைப்பாட்டு வகைகளைக் கவிச்சுவை உடையனவாக அமைத்தார். அவர் பாடல்களிலும் ஆசிரிய விருத்தங்கள் பல உண்டு.

சங்ககாலத்தில் ஆசிரியப்பாவே மிகுதியாக இருந்தது. இன்று கிடைக்கும் சங்ககாலத்து நூல்களில் உள்ள பாடல் களைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசிரியப் பாக்களே முதலிடம் பெறுவதைக் காணலாம்.

ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்வார்கள். அகவல் என்பதற்கு அழைத்தல் என்று பொருள். ஒருவரை வரவேற்பதற்கும் அழைப்பதற்கும் ஏற்ற ஒசையமைப்பை உடையது அகவல். அகவலில் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும். அதனால் அவற்றை ஆசிரியச்சீர், அகவற்சீர் என்று வழங்குவர்; இயற்சீர் என்றும் அதைக் கூறுவது உண்டு. -

ஆசிரியப்பாவில் ஒவ்வோரடியும் நான்கு ஈரசைச் சீர்களால் அமைந்திருக்கும். இடையிலே காய்ச்சீர்-நேரில் முடியும் மூவசைச் சீர்கள்-வரலாம். அகவல் மூன்றடி முதல் பல அடிகளால் வரும். -

. ‘வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/62&oldid=655899" இலிருந்து மீள்விக்கப்பட்டது