பக்கம்:கவி பாடலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கவி பாடலாம்

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க நன்மைவந் தெய்துக தீதெலாம் நலிக...”

இந்தப் பாரதியார் பாட்டு அகவல் அல்லது ஆசிரியப்பா. -

அகவலில் ஒவ்வோரடியிலும் மூன்றாவது சீரில் மோனை அமைந்தால் அழகாக இருக்கும். எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக அமைவது நிலைமண்டில ஆசிரியப்பா என்று பெயர் பெறும். கடைசி அடிக்கு முன் அடி மாத்திரம் மூன்று சீர்களால் அமைய, மற்ற அடிக ளெல்லாம் நாற்சீர் அடிகளாக இருப்பது நேரிசை யாசிரியப்பா. இந்த இரண்டுமே நூல்களில் அதிகமாக உள்ளவை. நடு நடுவே இரண்டு சீரடி, மூன்று சீரடியாகச் சிலவற்றைப் பெற்று மற்றவை நாற்சீரடியாக இருப்பது இணைக்குறளாசிரியப்பா. எல்லா அடிகளும் நாற் சீரடிகளாக அமைய, எந்த அடியை எங்கே மாற்றி வைத் தாலும் பொருள் மாறாமல் இருப்பது அடிமறி மண்டில ஆசிரியப்பா. இந்த இரு வகைகளும் இலக்கியத்தில் மிகுதியாக வருவதில்லை. -

‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் - கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”

இது குறுந்தொகையென்னும் சங்க நூற் பாட்டு. இதில் ஈற்றயலடியாகிய மூன்றாவது அடி முச்சீர் அமைந்தது. அதனால் இது நேரிசை ஆசிரியப்பா. சங்ககாலத்து அகவலின் ஓசையே ஒரு தனிச் சிறப்புடையது.

இந்தப் பாட்டின் அடிகளுக்கு ஒசை யூட்டிப் i ffTF353. GR) fris),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/63&oldid=655900" இலிருந்து மீள்விக்கப்பட்டது