உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(எ-டு) போர்த்தி

போத்தி

(பா. 2)

வெற்றி

வெத்தி

(பா.9)

நான்கு

-

நாலு

(பா.9)

உற்சாகம்

- உச்சாகம்

(un. 10)

செந்நெல்

சென்னல்

பா.181

சல்லிசல் (பா, 15)

வாற

வருகிற

விசையகிரி வேல் சின்னோபன் என்ற புரவலன் முக்தி பெற்ற பின்னர் (பா. 4) அவனது குமாரன் விசையகிரி வேலாயுதச் சின்னோபராயன் புரவலனாகிய காலத்தில் (பா. 6) இந்நூல் இயற்றப்பட்டதெனத் தெரிகிறது.

2.3.4ஆம் பாடல்கள் பழனி முருகன் பவனி வந்தபொழுது காணப்பட்ட அலங்கார பரிவாரங்கள் பற்றிப் பகர்கின்றன. 5ஆம் பாடல் முருகனைப் புகழ்கிறது. 6ஆம் பாடல் முதல் 10ஆம் பாடல் வரை முருகன் பிறந்து வளர்ந்து சூரபன்மனை அழித்த புராணக் கதை விதந்தோதப்படுகிறது. தேவரைச் சிறை மீட்டமையும் தெய்வானையை மணந்தமையும் 11ஆம் பாடற் செய்திகளாம். 12ஆம் பாடல் முதல் 14ஆம் பாடல் வரை முருகனை வணங்க வந்த பல நாட்டவரின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. துளுவை மட்டில்லியார் முதல் மிலாடர் வரை சுமார் 45 இனத்தவரைச் சுட்டிச் செல்வது குறிப்பிடத்தகுந்தது. 15ஆம் பாடல் முதல் 18ஆம் பாடல் வரை முருகன் பெருமைகள் பேசப்படுகின்றன. 18ஆம் பாடலில் முருகன் அகத்தியருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது தொடர்பான புராணக் குறிப்பு இடம்பெறுகிறது. தெளிவான பொருள் விளக்கம் கிடைக்கவில்லை. 19ஆம் பாடலில் நக்கீரர் தொடர்பான புராணக் குறிப்பும், திருஞானசம்பந்தர் செய்த புனல்வாதமும், கூன்பாண்டியனின் நோய் நீக்கமும், சமணரைக் கழுவேற்றிய செய்தியும் எனப் பல குறிப்பிடத்தக்க செய்திகள் உள்ளன. 11. 20ஆம் பாடல்கள் மீண்டும் புரவலன் வேலாயுதச் சின்னோபராயனைக் குறிப்பிட்டு அவன் முருகனை வணங்குகிறான் என்று புகழ் பாடுகின்றன. 21ஆம் பாடல் முதல் 23ஆம் பாடல் வரை அமைந்தவற்றில் பழனியில் உள்ள சன்னதிகள், மடம், மூர்த்திகள், துறைகள் முதலியவற்றைப்பற்றிக் குறிப்புகள் உள்ளன. 23ஆம் பாடல் இடும்பனையும் அவன் காவடி தூக்கியமையையும் குறிப்பிடுகிறது.

பாடல்கள் அனைத்திலும் ரகர றகரப் பிழைகள் பெருவாரியாக மலிந்துள்ளன. ளகர ழகரப் பிழைகள் ஆங்காங்கு உள்ளன. பேச்சு வழக்கிலமைந்த நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வைக்கும் வழக்கம் பண்டுதொட்டுத் தமிழகத்தில் உள்ளது என்பதற்கு இச்சுவடி சான்றாக அமைகிறது. பாடல்கள் பின்வருமாறு:

90

காகிதச்சுவடி ஆய்வுகள்