உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேலும் டி. கே.சி. 16-12-49இல் எழுதிய கடிதத்தில் ஒத்த உணர்ச்சி இருந்தால் மட்டும் போதாது என்று திருவள்ளுவரின்

"புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்"

என்னும் குறளுக்கு கலை, கவிதை. நட்பு இவை வளர்ப்பதற்கு நெருங்கிப் பழகுதல் தேவை என்று அன்போடு சாடுகிறார்

கலப்படம் இல்லாது அன்பைப் பொழிவதிலே குற்றாலத்து அருவி போன்றவர் டி. கே. சி. இவர்தம் நண்பர்கள் எஸ். மகாராசன் மற்றும் வேலம்மாள் அவர்களுக்கு.

உங்கள் இருவருக்குமே அரசியல் கிடையாது. நான் சொல்வதை வைத்து ஒரு புத்தகம் போடலாமே என்ற நினைப்பும் கிடையாது. ஆகையால் உங்கள் இதயங்களை அப்படியே என் கையில் நிபந்தனையற்றுக் கொடுத்துவிடுகிறீர்கள். கலை உலகத்தில் மிகவும் ஆழமான பொங்குமாங்கடல்கள் பல இருக்கின்றன. நான் எந்த ஆழத்திற்குப் போனாலும் நீங்கள் இருவரும் என்கையை இறுகப் பிடித்துக் கொண்டு வரத் தயாராக இருக்கிறீர்கள்"

என்று எழுதியுள்ளார். மேலும் ஒரு கடிதத்தில்

"ஒருவனுக்குக் கை நிறைய கிடைத்த வைரங்களை வைக்க பெட்டகமோ, வீடோ இல்லை. அவைகள் கிடைத்தன. அப்போது எவ்வளவு ஆறுதல் கிடைக்குமோ, அத்தகைய ஆறுதல் எனது பாடல்களை தாங்களிடமும். வேலம்மாளிடமும் ஒப்படைக்கும் போது கிடைக்கிறது. ஒப்படைத்த பாடல் சில இத்துடன்"

என்று தம் நண்பர்களுக்கு எழுதியதன் மூலம் அறியமுடிகிறது. டி. கே. சி. யின் ஏக்கத்தை.

உடனிருந்து அனுபவிக்க 24,000மைல் சுற்றளவுள்ள உலகத்தில் யாரும் இல்லையே - நீங்களும் தம்பியும் தவிர"

என்ற கடித வரிகள் காட்டுகின்றன. ஒத்து உணர்வதற்குத் தமக்கு நண்பர்கள் வேண்டும் என்பதை.

170

கடவுள் பாடே கஷ்டமாய்ப் போய், மனுஷர்களைப் படைத்துக்

கொண்டார்"

"தொட்டதெல்லாம் பஸ் மீகரணம் ஆக வேண்டும் என்று வரம் கேட்டான். சிவ பெருமான் கொடுத்தருளினார். சிவபெருமான் தலையிலேயே கை வைக்க ஆரம்பித்தான் அசுரன். கடவுள் பாடு அப்படி இருக்கிறது”

"கடவுளோடு ஒத்து அனுபவிக்க அவருக்கு ஆள் வேண்டுமாம்.

காகிதச்சுவடி ஆய்வுகள்