உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்படியானால் என்னோடு உண்மைகளை ஒத்து அனுபவிக்கத் தம்பியும் தாங்களும் வேண்டும் என்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை தானே"

என்ற கடித வரிகள் (01-02-49) காட்டுகின்றன.

டி. கே. சி. கடிதங்களில் நகைச்சுவையும் மருத்துவமும்

இரசிகமணி 03-09-47இல் எழுதிய கடிதத்தில் நகைச்சுவையும் மருத்துவமும் கலந்து காணப்படுகின்றது. சான்றாக,

"01-09-47 அன்று அனுப்பிய கடிதம் கிடைத்தது. உடம்பைப் பற்றியும், நோயைப்பற்றியும் எழுதிய குறிப்பு வெகு அழகாய் இருக்கிறது. ஆனால், நோய் அவ்வளவு அழகாய் இருக்கிறது என்று சொல்ல முடியாது"

"இரவில் படுக்கப் போகும்போது ஈரத்துணி ஒன்றைக் கழுத்தில் சுற்றி அதற்கு மேல் பிளானலையோ, பட்டையையோ சுற்றிக் கொள்ள வேண்டியது. அவ்வளவுதான் தூக்கம் வந்துவிடும். அநேகமாய்த் தொண்டையிலுள்ள புண் ஆறிவிடும்.

இந்த வைத்தியத்துக்கு ஒரே ஆக்ஷேபணைதான் இருக்கக்கூடும். அதாவது செலவு இல்லாத காரியமாக இருக்கிறது என்பதுதான். ஆனால் வியாதிக்கு அந்த விஷயம் தெரியாதல்லவா? ஏதோ ரொம்பச் செலவு செய்துதான் காரியம் நடந்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டு பயந்து விலகிவிடும்"

எனும் இக்கடித வரிகளில் ஆழ்ந்த உளநூல் புலமை. நுணுக்கமான நையாண்டி, மருத்துவம், நகைச் சுவை போன்றவற்றைக் காணமுடிகிறது.

டி

கே.சி. யின் உடல் நிலை கேட்டு எழுதிய கடிதத்திற்கு.

"என் உடம்பைப் பற்றி தாங்கள் மிக்க கவலை கொள்ளுவதாகத் தெரிகிறது. அது வேண்டாம். உடம்பு சரியாகத்தான் இருக்கிறது. இன்ஸுலின் இன்ஜெக்ஷன் கிடையாது. மற்றக் குத்துகளும் இல்லை. மலை ஏற முடியாது. மரம் ஏற முடியாது அவ்வளவுதான்"

என்று பதிலளித்துள்ளார்.

கால் புண் தொடர்பாக :

"என்னுடைய காலில் புண் கொஞ்சம் குணத்துக்கு வருகிறது. அதற்கு என்ன உபசாரம் எல்லாமோ செய்தாகிறது. நாலைந்து நாளில் குணமாய்விடும் என்று ஏகோபித்துச் சொல்லுகிறார்கள். புண்ணின் காதில் அந்த வார்த்தை விழும் என்று எண்ணுகிறேன்”

இடது காலில் இருந்த புண் முற்றிலும் குணமாய் விட்டது. காகிதச்சுவடி ஆய்வுகள்

171