உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குணமாகிறது என்று ஒன்று அதற்கு இருக்கிறதே; அதிசயந்தான். வலது கால் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சௌகரியப்பட்டு வருகிறது. ஆனாலும். வேண்டும் போது சேஷ்டை பண்ணி விடுகிறது எல்லாவற்றிற்கும் நாளாக செய்யும், அப்பாவி உடல் ஏதோ அதனால் கூடிய மட்டும் அங்கங்கே பழுது பார்த்துக் கொண்டிருக்கிறது அதன் மேல் குற்றமில்லை"

வேண்டியி என்ன

டி.கே.சி.உணவுப் பத்தியம் தொடர்பாக எழுதிய கடிதம்

"உளுந்து தோசை. ருக்மணி அம்மாள் (கல்கியின் மனைவி) அனுப்பிய நார்த்தங்காய் ஊறுகாய். இட்டலி. தயிர் எல்லாம் சேர்ந்து வாய்க்கு ருசியான ஆகாரமாக ஆகிவிடுகிறது போதும்தானே

மேலும் நோய் பற்றி,

"உடலை உற்றநோய் மனசை எங்கெல்லாமோ செலுத்தி யிருக்கிறது. ஒரு சின்னஞ்சிறு உயிர்த் தாதுவிலிருந்து ஜீவன் உள்ளிருந்து யோசனை பண்ணச்

முக்தர்வரையும்

செய்திருக்கிறது"

என்று எழுதியுள்ளார்.

அன்பு

வள்ளுவர் அன்பைப் பற்றிச் சொல்லவந்தவர். ஆனால் எல்லாவற்றிலும் அல்லவா மத்தாப்புப் போட்டுவிட்டார்.

"ஆருயிர்க்(கு)

என்போடியைந்த தொடர்பு"

ஆகவே. குறளாசிரியர் சயின்டிஸ்ட் ஆக விளங்குகிறார்.

திருமூலரும் திருவள்ளுவரது வழித் தோன்றல் என்பதனை

"உடம்பினுக்குள்ளே

உறுபொருள்

கண்டேன்"

அந்த உயிர்த் தத்துவந்தானே சிற்பி. உடல் உடல் என்பதெல்லாம் அந்தச் சிற்பியின் கைக்குவந்த களிமண்தானே என்கிறார்.

மேலும் சமுதாய இயலைப்பற்றியும் இரசிகமணி ஆழ்ந்து சிந்தித்து. சமுதாயச் சடங்குகளில் பொதிந்துள்ள உண்மைகளையும் அழகுகளையும் கடித இலக்கியம் வாயிலாக அளித்துள்ளார்.

"தைச் சங்கராந்தி என்றால் பெண்டுகளுக்கு வேலை. அன்று

172

காகிதச்சுவடி ஆய்வுகள்