உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்றும்.

சூரியன் உதிப்பது ஒரு தனி அழகு குத்து விளக்கு. ஆரம், விபூதி. குங்குமம்,கரும்பு. மஞ்சள் தோகை. குழந்தை. பெண்டுகள். அவர்களுடைய அழகான உடைகள். அடுப்புகள் எல்லாவற்றிற்கும் சூரியன் தங்க முலாம் பூசி விடுகிறது"

"சித்திரக்கலை, சிற்பக்கலை, கோலக்கலை, சங்கீதக் கலை ஆகிய கலைகளை உள்ளடக்கியது நவராத்திரி விழா"

என்றும் கூறியுள்ளார்.

கோலத்திலிருந்து கவிதைக்கு.

கே.சியின்

கவிதையிலிருந்து சிருஷ்டி

தத்துவத்துக்குமே டி. கே. சியின் எளிமைக் கடிதங்கள் நம்மை இழுத்துச் சென்று விடுகின்றன.

சில்லறை விஷயங்களைப்பற்றிக் கடிதங்கள் விளக்கிக் கொண்டிருக்கும் போதே அரிய உண்மைகள் எல்லாம். அந்த ஒளியிலே தெளிவாகிவிடும். விஞ்ஞானம், சமயம், கடவுள் தத்துவம் - எல்லாவற்றைப் பற்றியுமே. மத்தாப்பூ போட்டுவிடும் அந்தக் கடிதங்கள்.

மேலும் டி. கே. சி. கம்பனுடைய உள்ளத்தில் நுழைந்து. அதன் அந்தரங்கத்தை அறிந்து, கம்பன் பாடல்களைப் பாடி, கவிவானம் உண்டாக்கி, அமுத மழை பொழியச் செய்வார்.

பெண்களைப்பற்றி டி. கே. சி.

உணர்ச்சியைப் பொறுத்த அளவில் பெண்கள் ஆடவர்களைக் காட்டிலும்

உயர்ந்தவர்கள்,

உணர்ச்சி அவர்களிடம் (பெண்களிடம்) அளவில்லாமல் இருக்கிறது. அந்த உணர்ச்சியின் அளவையும் வேகத்தையும் ஆடவர் கண்டதில்லை.

கரும்பும் நாணலும் ஒன்றுதான். பாட்டின்படி ஓர் இனந்தான். நாணலை என்ன பிழி பிழிந்தால்தான் என்ன? சாறு வந்து விடுமா? வந்தாலும் எவ்வளவுதான் வந்துவிடும். காய்ச்சிச் சர்க்கரை எடுப்பதோ முடியவே முடியாது.

ஆனால் கரும்பு என்றால் வேறு விஷயம். ஒரு கரும்பை ஆலையில் கொடுத்துவிட்டால் ஆலை பிழிந்து கொடுக்கிற சாறு ஓர் உழக்கு.

நாணலுக்கும் கரும்புக்கும் உள்ள சம்பந்தந்தான் ஆடவருக்கும் பெண்டிர்க்கும் - உணர்ச்சி சம்பந்தப்பட்ட மட்டில்"

டி.கே.சி. திருச்சி உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது பாப்பம்மாள்

காகிதச்சுவடி ஆய்வுகள்

173