உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அண்ணியின் வீட்டில் தங்கிப் படித்தார். பெற்ற தாயைவிட அருளோடு அன்போடு பாதுகாத்த பாப்பம்மாளுக்கு 'பாப்பம்மாள் ஒரு இதிகாச பாத்திரம் மட்டும் அல்ல. ஒரு ‘இதிகாசமேதான்' என்று அவரைக் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்துவார்.

பள்ளி வாழ்க்கையில் டி. கே.சி.

டி கே. சி. கல்வியை வெறுக்கவில்லை. உண்மையான கல்வியும். உண்மைக் கல்வியைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியும் இல்லையே என்று வருந்தியதுண்டு.

கலையில் எல்லாம் சிறந்த கலை வாழ்க்கைக் கலை. அந்தக் கலையைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரிவிக்காமல் இருட்டடிப்புச் செய்து விடுகிறது பள்ளிக்கூடம்.

ஊருக்கு உபதேசம் செய்து விட்டுத் தம் காரியத்தைத் தமக்கு உகந்தபடிப் பார்த்துக் கொள்வது பொதுப்படையாக உலக இயல். ஆனால் டி. கே. சி.யிடம் சொல்லும் செயலும் ஒன்றுபட்டிருந்தன. தம் பேரன்மார் மூவரையும், பேத்தியையும் டி கே சி. பள்ளிக் கூடம் அனுப்பவில்லை. தாமே ஆசிரியராக அவர்களுக்கு ஞான குருவாக இருந்தார்.

தமிழ் ஸ்காலர்களுக்குத் தமிழில் நம்பிக்கையில்லை என்ற தமிழ்ப் பண்டிதர்களுக்கு 'சையன்ஸ் இங்கிலீஷிலா இருக்கிறது? இல்லை. அஸ்ட்ரானமி வானத்தில் இருக்கிறது. ஜியாலஜி பூமிக்குள் இருக்கிறது. பாட்டனி காட்டில் இருக்கிறது. பிஸியாலஜி நம் தேகத்தில் இருக்கிறது. சைக்காலஜி நம் உள்ளத்தில் இருக்கிறது. இங்கிலீஷ் பாசையில் எப்படியிருக்கும்?. .. சையன்ஸ் புத்தகத்தில் இருக்கிறது என்ற மூடபுத்தி ஒழிய வேண்டும். அப்போதுதான் நமது தமிழ்க் கல்வி உருப்படும் எனக் கல்வி பற்றிப் பேசுகிறார். 'தமிழனுக்குத் தமிழே துணை' என்ற எண்ணம் முதலில் வரவேண்டும் என்கிறார்.

03-09-48இல் சென்னையிலிருந்து எழுதிய கடிதத்தில் டி. கே. சி. பள்ளிக் கல்விமீது கொண்டிருந்த கருத்தைத் தெளிவுபடுத்துவதாக அமைகிறது. அக்கடிதத்தில் காணப்படும் செய்திகள் வருமாறு:

174

"பள்ளிக் கூடத்தில் குழந்தைகளைக் கொஞ்சம் கருணையோடு நடத்தினால் உடம்பாவது நன்றாய் இருக்கும். பள்ளிக் கூடம் சீராவதற்குமுன் உலகமே பெரும் புரட்சி அடைய வேண்டும். நாளுக்குநாள் எனக்கு என்ன படுகிறதென்றால், உலகத்திலுள்ள மூடக் கொள்கைகளுக்கெல்லாம். வறண்ட வாழ்க்கைக்கெல்லாம். நம்முடைய அழகிய பண்பாட்டை விட்டு ஆடவர், பெண்டிர் சிலர் விலகிப் போவதற்கு எல்லாம் காரணம், பள்ளிக் கூடத்துப் படிப்புத்தான் என்று சொல்கிறார்.

பிள்ளையார் குட்டைக் கண்ணிலே குட்டிக் கொண்டமாதிரி. விஷயம் அல்லாத, விளங்காத பாடங்களைக் குழந்தைகள் உள்ளத்துக்கு புகுத்தி விடுகிறோம். பிறகு சவலை நோய் தான். ஒரு உண்மையும் உள்ளத்தோடு சேர்ந்து ஐக்கியம் ஆவதில்லை" டி.கே.சி. கொண்டிருந்த கருத்து சிந்திக்கத்தக்கது. இன்றைய நிலையிலும் காகிதச்சுவடி ஆய்வுகள்